Dancing Text

Wednesday, April 18, 2012

பிரித்தறியும் சக்தி



பாலிலே வெண்ணெய் உண்டு
பார்ப்பதற்கு தெரிகிறதா?
கடைந் தெடுத்தால் மட்டும் தான்
அதுவம் தெரிகிறது

சிப்பியுள்ளே முத்தும் தான்
சிதறி கிடக்கிறது
பிரித்து பார்த்திடவே
காணக் கிடைக்கிறது

தென்னையில் இளநீரும்
தேங்கி இருக்கிறது
உடைத்து எடுத்திடவே
தாகமும் தீர்கிறது

நிலத்தின் உள்ளே தான்
வைரமும் இருக்கிறது
அகழந்தெடுக்க மட்டுமே
கைக்கு வருக்கிறது

எல்லா உயிரிடமும் நீயும் இருக்கின்றாய்
அகந்தை உள்ளதால் அதுவும் தெரியவில்லை
அதையம் அகற்றிவிட்டால்
அகந்தம் புரிகிறது
ஆதி பராசக்தியாய் காட்சியம் தெரிகிறது.

-சக்தி. திருமதி கோமதி கணேசன் (இலங்கை)
சக்தி ஒளி ஜீன் 2007
By Gayathiri Superamaniam 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...